நட்சத்திர கிரிக்கெட்டின் மர்மம்!!!!

image

நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கான நிதி திரட்ட ஏப்ரல் 17-ல் நடக்கவுள்ள நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் அணி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதல் கட்டமாக அணிகளின் கேப்டன்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குக் கட்டடம் கட்ட நிதி திரட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி, வரும் ஏப்ரல் 17-ம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட அனைத்து நடிகர்களும் பங்கேற்கிறார்கள். போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. 7 போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த 8 அணிகளில் 48 நடிகர்கள் பங்குபெறுகிறார்கள். ஒவ்வொரு அணியிலும் 6 பேர் இருப்பார்கள். 6 ஓவர்களுக்குப் போட்டி நடக்கும். ஏப்ரல் 17 அன்று காலை 9 மணிக்கு ஆரம்பிக்கும் போட்டி, இரவு 10 மணி வரை நடைபெறும்.

டிக்கெட் கட்டணம், சேடிலைட் உரிமம் என மொத்தம் ரூ. 13 கோடி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அணிகளின் கேப்டன்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார்கள். சென்னை சிங்கம்ஸ் கேப்டனாக சூர்யாவும், மதுரை காளைஸ் கேப்டனாக விஷாலும், திருச்சி டைகர்ஸ் கேப்டனாக சிவகார்த்திகேயனும், கோவை கிங்ஸ் கேப்டனாக கார்த்தியும், சேலம் சீட்டாஸ் கேப்டனாக ஆர்யாவும், தஞ்சை வாரியர்ஸ் கேப்டனாக ஜிவாவும், நெல்லை டிராகன்ஸ் கேப்டனாக ஜெயம் ரவியும், ராமநாடு ரைனோஸ் கேப்டனாக விஜய் சேதுபதியும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அணியில் இடம்பெறும் வீரர்களின் விவரங்கள் பிறகு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here