நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 65. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இதற்குமுன் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பதை நாம் அறிவோம்.சில மாதங்களுக்கு முன் தளபதி65 படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் என்று பேசப்பட்டது.சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் தளபதி65 படத்தில் இருந்து விலகினார் என்றும் கூறப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த மாஸ்டர் படம் கொரோனா தொற்றால் வெளியாகாமல் இருந்தது.2021 பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு தரப்பில் கூறப்பட்டிருக்கும் நிலையில்,மாஸ்டர் வெளியீட்டிற்கு பிறகு தளபதி65 படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர்.மற்ற நடிகர் & நடிகைகளுக்கான தேர்வு மும்முரமாக சென்னையில் நடைபெற்று வருகிறது.சில வாரங்களில் படத்தில் நடிக்க இருக்கும் மற்ற கலைஞர்களை பற்றிய தகவல்களும் அதிகாரபூர்வமாக அறிவிக்கபடலாம் எனவும் கூறுகின்றனர்.
ராஷி கனா,மாளவிகா மோகனன் மற்றும் டாக்டர் பட நாயகி பிரியங்கா உள்ளிட்ட கதாநாயகிகளுடன் தயாரிப்பு நிறுவனம் தொடர்பு கொண்டு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இம்முறை விஜய்க்கு ஜோடியாக புதிய நடிகை ஜோடியாக நடிக்க திட்டமிட்டுள்ளனர்.
நெல்சனிடம் படத்தின் முழுக்கதையை கேட்ட தளபதி விஜய் அடுதத் நிமிடத்திலே “கண்டிப்பா பண்றோம்” என்று பச்சை கொடி காட்டி இருக்கிறார்.ரசிகர்களும் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.இனி விஜய் ரசிகர்களுக்கு திருவிழா தான்