பட படவென பேசும் ஐஸ்வர்யா ராஜேஷ்!!!

image

இப்போதெல்லாம் பட் பட்டுன்னு பேசுற நடிகை யார்னு நினைக்கிறீங்க? நம்ம ஐஸ்வர்யா ராஜேஷ்தான்.

சில தினங்களுக்கு முன் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு புயலை கிளப்பினார். “நான் நல்லா தமிழ் பேசுவேன். அதனால்தான் எனக்கு பெரிய படங்களில் நடிக்க அழைப்பு வரவில்லையோன்னு நினைக்கிறேன். தமிழ் தெரிஞ்ச நடிகைகளை யார் மதிக்கிறா?” என்றொரு போடு போட்டார். இப்போது இன்னொரு போடு… “மனிதன் படத்தில் நானும் நடிக்கிறேன். ஹன்சிகாவும் நடிக்கிறாங்க. செட்ல ஒரு இடத்துலதான் இருந்தோம் நாங்க ரெண்டு பேரும். நான் பேசலாம்னு அவரை பார்த்து சிரிச்சேன். ஆனால் அவர் என்னை கண்டுக்கல. அப்புறம் நானும் அவரை கண்டுக்கல. இதுல எனக்கு ஒண்ணும் வருத்தம் இல்லே” என்றார். இப்படி உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாவிட்டால், இருந்த இடத்துல இலுப்பை செடி வச்சுருவாங்களே… என்றால், “ஐ டோன்ட் கேர். நமக்குன்னு இருந்தா அதை யாராலயும் மாத்த முடியாது. இல்லேன்னா யாராலயும் கொடுக்கவும் முடியாது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here