பிரபல மலையாள நடிகர் அனில் நெடுமாங்கட் ஏரியில் குளித்த போது பரிதாபமாக மூழ்கி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 48.நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷி திரைப்படத்தில் அய்யப்பன் நாயரின் உயர் அதிகாரியாக நடித்து அசத்தியவர் நடிகர் அனில் நெடுமாங்கட்.

நண்பர்களுடன் விடுமுறை நாளை கொண்டாட தொடுபுழாவில் உள்ள மலங்காரா அணையில் குளித்த போது எதிர்பாராத விதமாக நீருக்குள் மூழ்கி பிரபல மலையாள நடிகர் அனில் நெடுமாங்கட் உயிரிழந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவருக்கு வயது 48.
அய்யப்பனும் கோஷியும் பட இயக்குநர் சாச்சி கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது