தொல்லை தரும் அரசு பேருந்து பயணம்


“தயவுசெய்து சில்லரையாக கொடுக்கவும்“என்று பேருந்துகளில் எழுதப்பட்ட வாசகம் “சில்லரையாக கொடுக்கவும்“ என்று பல பேருந்துகளில் மாறுதலாகி“ சில்லரையில்லாவிட்டால்
பஸ்ஸில் ஏறாதே“என்று சொல்லும் காட்டமான வார்த்தைகளோடு நடததுனர்கள் கோபமுகம் காட்டும் நிகழ்வுகளும் நடக்கின்றன. .சில்லரை கவலையில்லாத பேருந்து நடத்துனரையும்
பயணிகளையும் பார்க்க முடியாது. .ஐந்து பைசா பத்து பைசா என்று ஆரம்பித்த சில்லறை பாக்கிகள் இன்று ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் அளவை அடைந்துள்ளன.சில்லரை கேட்டு கேட்டு
பழக்கப்பட்டதாலோ என்னவோ ஒன்பது ரூபாய் டிக்கெட்டிற்குப் பத்து ரூபாய் கொடுத்தால் ஒரு ரூபாய் கொடுங்கள் இரண்டு ரூபாயாக கொடுக்கிறேன் என்று கூறி அப்போதும் நம்மிடமே
நடத்துனர்கள் சில்லரை கேட்கிறார்கள்.

பெரும் பணம் புரண்ட பேருந்து வழித்தடங்கள் அரசுடமையாக்கப்பட்டன..பல்லவன் பாண்டியன் சேரன் சோழன் கட்டபொம்மன் என்று மன்னர்கள் பெயர்களோடு ஆரம்பிக்கப்பட்டவை.
தலைவர்கள் பெயரில் போக்குவரத்து கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டதும் சாதி பிரச்சினைகளும் ஆரம்பமாகின.போக்குவரத்து கழகங்கள் பல்கி பெருகியபின் நஷ்டத்தில் இயங்கின.சாதித் தலைவர்களின் நெருக்கடி தாங்கமுடியாது தலைவர்களால் மன்னர்களின் பெயர்களும் பறிபோக அரசு பேருந்துகளின் கழகங்கள் குறைந்து கோட்டங்களாகின.பேருந்தை பல நிறுத்தங்களில் நிறுத்திடவே பல ஒட்டுநர்களுக்கும் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கும் கசக்கும்.பயணிகளை பல நிறுத்தங்களில் ஏற்றாமல் செல்வதெற்கென்றே புதிய புதிய பெயர்களில் வழித்தடங்கள் புதிது புதிதாக தோன்றுகின்றன.LSS=Lightning Super service
TSS=Time Saved Service PHS=Peak Hour Service FP=Fast Passenger Point to Point End to End One to One எப்படி இப்படியெல்லாம் பெயர்களை
கண்டுபிடிப்பார்களோ தெரியவில்லை..பல ஊர்காரர்கள் போராடி நிறுத்தங்களைப் பெறும் போது வேறு பெயரில் அரசுப் பேருந்து நிற்காமல் சென்றுகொண்டிருக்கும்..தோழர் ஒருவர் தனியார் வேன்களில் பயணிக்கக்கூடாது ஏன் என்றால் அவர் சொல்வார் வாருங்கள் வாருங்கள் என்று அழைப்பார்கள் பின்னர் உங்கள் மடியில் ஒருவரையும் முதுகில் ஒருவரையும் உட்கார வைப்பார்கள் என்பார்.விரைவுபேருந்துகளில் திருநெல்வேலியிலிருந்து சென்னை வரை சென்று வந்தால் காது செவிடாகும் இரைச்சலால் துணிகளில் கறைபடியும் அழுக்கால் அந்த அளவில் சுத்தம் சுகாதாரமின்றி சென்று வருகின்றன.
பேருந்தின் முன்பகுதியில் V.I.P இருக்கைகள் இரண்டு ஒதுக்கப்பட்டிருக்கும் MLA MP கள் வந்தால் கொடுப்பதற்கு என்பார்கள். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து .இன்று வரை எந்த MLA MPயும்
அதில் அமர்ந்து பயணிக்கவில்லை. எல்லா கட்சிகளும் தங்களது மக்கள் பிரதிநிதிகளை மாதம் ஒரு முறையாவது அரசு பேருந்துகளில் பயணம் செய்திட வலியுறுத்த வேண்டும். அப்போது மக்களின் வலி தெரியும்.முதலுதவி பெட்டிகள்
குப்பை சுமந்தும் டிவி இருப்பிடங்கள் ஒட்டையாகவும் பைகள் வைக்கப்படும் இடங்கள் தூசியடைந்தும் கால்களின் கீழே மண்ணும் அழுக்குமாக காட்சியளிப்பதைக் காண்கையில் மனம் அழுகிறது..சாதாரணவார்டு உறுப்பினர் கூட சொகுசு காரில் செல்கையில் இந்த அவலங்களை யார் பார்ப்பது. பேருந்துகள் நல்ல நிலையில் சுத்த சுகாதரமோடு இயக்கப்பட்டு ஒட்டுநர் நடத்துனர் வார்த்தைகளில் இனிமையிருந்தால் கட்டண உயர்வுகள் கண்ணுக்குத் தெரியாது


Like it? Share with your friends!

1
185
1, 185 points

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொல்லை தரும் அரசு பேருந்து பயணம்

log in

reset password

Back to
log in